/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லாடனேந்தலில் பஸ் ஸ்டாப் பொதுமக்கள் கோரிக்கை
/
லாடனேந்தலில் பஸ் ஸ்டாப் பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 09, 2024 05:32 AM
திருப்புவனம் : திருப்புவனம் அருகே லாடனேந்தல் அரசு பள்ளி முன் பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி லாடனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் லாடனேந்தல், பாப்பான்குளம், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். தினசரி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் டவுன் பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்
பள்ளி முன் பஸ் ஸ்டாப் இல்லாததால் 200 மீட்டர் துாரம் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் பஸ் ஸ்டாப் அல்லது பாப்பான்குளம் விலக்கில் இறங்கி நடந்து வருகின்றனர். மாணவர்கள் நடந்து வரும் போது அடிக்கடி விபத்து நேரிடுகின்றன. இதனை தவிர்க்க பள்ளி முன் பஸ் ஸ்டாப் அமைத்து டவுன் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாடனேந்தலைச் சேர்ந்த செல்லவேலு என்பவர் அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டத்திற்கு மனு செய்தார்.
இதற்கு பதிலளித்த நிர்வாகம் பள்ளி முன் பஸ்கள் நின்று செல்வதற்கு போதிய இடவசதி இல்லை. மேலும் பள்ளியின் இருபுறமும் குறிப்பிட்ட தூரத்தில் பஸ் ஸ்டாப் உள்ளதால் இந்த இடத்தில் பஸ் ஸ்டாப் அமைவது குறித்து உரிய விசாரணைக்கு பின் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.