/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
‛ஸ்மார்ட்' மீட்டர் திட்டம் அமல்படுத்தினால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் பேட்டி

ADDED : பிப் 26, 2025 02:19 AM

சிவகங்கை:''தமிழக மின் வாரியத்தில் 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை அமல்படுத்தினால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் எஸ்.உமாநாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் மின்பயனீட்டாளர்களுக்கு உரிய சேவை செய்யும் அளவிற்கு ஊழியர்கள் இல்லை. இத்துறையில் மாநில அளவில் 62,000 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும்.
மின்வாரியத்தில் 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் நடக்கிறது. இத்திட்டம் வந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
அதே போன்று இந்த மீட்டரின் விலை ரூ.6000 வரை உள்ளது. இந்த மீட்டருக்கான கட்டணத்தை யார் செலுத்துவது என்ற பிரச்னை ஏற்படும்.
இத்திட்டத்தை மக்களின் மீது திணிக்கும் சூழல் நிலவும். 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்படும் பட்சத்தில் மின்பயன்பாட்டு கால உச்சநேரமாக காலை 6:00 முதல் 10:00 மணி, மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி, மற்றொரு உச்ச நேரமாக அதிகாலை 5:00 முதல் 6:00 மணி வரை என நிர்ணயித்து மின்கட்டணம் உயர்த்தவும் வாய்ப்புண்டு. எனவே 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை அரசு அமல்படுத்தக்கூடாது.
மின் ஊழியர் சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் 2024 டிசம்பருக்கு முன் களப்பணியாளராக சேர்ந்திருந்தால் அவர்களுக்கு 6 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அதை வழங்கவில்லை. களப்பணியாளருக்கு பணியிட மாறுதலுடன் ெஹல்பர் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரானோ காலத்தில் பல்வேறு சலுகைகளை நிறுத்தி விட்டனர். நிறுத்திய சலுகைகளை வழங்கவில்லை. சம்பள உயர்வு வழங்க வேண்டிய விஷயத்தை முடிவு செய்வதற்கு முன், இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.5000 வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை முன்வைத்து தான் நேற்று மாநில அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடந்தது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நிரந்தர, ஒப்பந்த, பகுதி நேர ஊழியர்களை ஒன்றிணைத்து மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.