/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் கடைக்கு வாடகை பாக்கி; மூடப்பட்ட கடைகளால் வருவாய் இழப்பு
/
தேவகோட்டையில் கடைக்கு வாடகை பாக்கி; மூடப்பட்ட கடைகளால் வருவாய் இழப்பு
தேவகோட்டையில் கடைக்கு வாடகை பாக்கி; மூடப்பட்ட கடைகளால் வருவாய் இழப்பு
தேவகோட்டையில் கடைக்கு வாடகை பாக்கி; மூடப்பட்ட கடைகளால் வருவாய் இழப்பு
ADDED : ஆக 08, 2024 10:36 PM

தேவகோட்டை : வாடகை உயர்வால் நகராட்சி கடைகளுக்கு டெண்டர் எடுக்காமல் கடைகள் மூடி கிடப்பதால்நகராட்சிக்கு மாதம் ஒன்றுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தேவகோட்டை நகராட்சியில் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் கடைகள் மற்றும் நாளங்காடி என்ற பெயரில் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினசரி மார்க்கெட் கடைகளில் மட்டும் தினமும் வாடகை வசூலிக்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்பு இல்லாத காலத்தில் அதிகாரிகள் நிர்வாகத்தில்இருந்த போது கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டது. அப்போது ரூ. ஐயாயிரமாக இருந்த கடை வாடகை தற்போது ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.21 ஆயிரம் செலுத்தும்நிலை உள்ளது. பல மடங்கு வாடகை உயர்வால் கடையை நடத்துவோரால் வாடகையை கட்ட முடியவில்லை.
கொரோனா காலத்தில் கடைகள் மூடப்பட்ட காலத்திற்கும் வாடகை தர வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் நிர்பந்தம் செய்தனர். நகராட்சி கடையை எடுத்தவர்களால் வாடகையை கட்ட முடியாமல் சிரமப்பட்டனர். ஒவ்வொரு கடைக்கும் லட்சக்கணக்கான ரூபாய் வாடகை பாக்கி ஏற்பட்டு இதன் மூலம் மூன்று கோடி ரூபாய் வரை நிலுவை இருந்தது.
அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து வாடகை பாக்கி வசூலில் நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டினர். வாடகை பாக்கி கட்ட மறுத்தவர்கள் கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் மட்டும் 19 கடைகள் மூடப்பட்டுள்ளன. நகராட்சிக்கும் ஆண்டுக்கு ரூ ஒரு கோடி வரை வருவாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகராட்சி சார்பில் இந்த கடைகளுக்கு புதிய டெண்டர் கோரப்பட்டது.கடைகள் மராமத்து செய்யப்படாமல் பெயின்ட் கூட அடிக்காத நிலையில் வாடகை அதிகமாக இருப்பதால் யாரும் டெண்டர் எடுக்க வரவில்லை.