/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானகிரி வழியாக மதுரைக்கு கூடுதல் பஸ் விட கோரிக்கை
/
மானகிரி வழியாக மதுரைக்கு கூடுதல் பஸ் விட கோரிக்கை
ADDED : மே 10, 2024 04:56 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அரைமணி நேரத்திற்கு ஒரு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு செல்ல இரண்டே முக்கால் மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை ஆகிறது.
மக்களின் கோரிக்கையை ஏற்று தேவகோட்டையில் இருந்து காரைக்குடி செல்லாமல் மானகிரி திருப்புத்துார் வழியாக மதுரைக்கு பஸ் 10 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் 45 நிமிடம் பயண நேரம் குறைந்தது. இந்த பஸ்சிற்கு கூட்டம் அதிகரித்தது. இந்த வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பஸ் இயக்கப்பட்டது. சில நாட்களிலேயே அந்த பஸ் நிறுத்தப்பட்டது. மக்கள் நலன் கருதி கூடுதலாக மானகிரி வழியாக மதுரைக்கு பஸ் விட கோரிக்கை எழுந்துள்ளது.