/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களில் குடிநீர் தொட்டியில் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்த கோரிக்கை
/
கிராமங்களில் குடிநீர் தொட்டியில் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்த கோரிக்கை
கிராமங்களில் குடிநீர் தொட்டியில் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்த கோரிக்கை
கிராமங்களில் குடிநீர் தொட்டியில் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்த கோரிக்கை
ADDED : செப் 03, 2024 06:18 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளுடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் பொருத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் குளத்து நீர், ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரே குடிநீராக பயன்படுத்தப்படுகிறது.
மழை பெய்தும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை காரணங்களால் குடிநீராக பயன்படுத்தும் குளங்களில் நீர் வரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரை குடிக்க வேண்டிய நிலை பல கிராமங்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கிராமங்களில் போர்வெல் அமைத்து சிறு மின் விசை பம்ப் மூலம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் பெரும்பாலான இடங்களில் உவர்ப்பு நீராக இருப்பதால் மக்கள் வேறுவழியின்றி இந்த தண்ணீரை குடிப்பதால் பாதிப்பும் ஏற்படுகிறது.மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளில் 80 சதவீத கிராமங்களுக்கு மட்டுமே கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
எஞ்சிய கிராமங்களில் குளத்து நீரையும் ஆழ்குழாய் நீரையுமே மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.