/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் கோயிலில் கூரை அமைக்கும் பணி
/
தாயமங்கலம் கோயிலில் கூரை அமைக்கும் பணி
ADDED : மார் 15, 2025 05:24 AM

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வரும் 29ம் தேதி பங்குனி பொங்கல் விழா துவங்க உள்ளது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக தகர கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பொங்கல் விழா துவங்கவுள்ளது.
தொடர்ந்து 10நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு செல்வர்.
கோயிலின் உள்பிரகாரத்தில் பக்தர்கள் வரிசைகளில் நின்று தரிசனம் செய்வர். கோடை வெயில் அதிகமாக இருப்பதால் விழா காலங்களில் மட்டும் தற்காலிகமாக தகர கூரை அமைப்பது உண்டு. இதற்கான பணிகள் துவங்கியுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு அதிக வருவாய் வரும் நிலையில் நிரந்தரமாக உள்பிரகாரத்தில் மண்டபம் கட்ட வேண்டுமென்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.