ADDED : மார் 02, 2025 05:37 AM
சிவகங்கை: சிவகங்கை புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் யாவரும் கேளிர் இணைந்து அறிவியல் கண்காட்சியை நடத்தினர்.
அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.
கோட்டாட்சியர் விஜயகுமார், புனித மைக்கேல் கல்விக் குழும தலைவர்ஸ்டாலின், சி.இ.ஓ., பிரிட்ஜெட் நிர்மலா, நிர்வாக இயக்குனர் ஜான் பிரிட்டோ அமலன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி கண்காட்சியை துவக்கி வைத்தனர். கண்காட்சியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுத் தொகையும் கேடயமும் வழங்கப்பட்டது.
சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன்தலைமை வகித்தார். ஆசிரியர் சிவசிலா வரவேற்றார்.
சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி கண்காட்சியை தொடங்கி வைத்தார். வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுனர் செல்வராணி கண்காட்சியில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார். சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது.
தேவகோட்டை சேர்மன்மாணிக்கம் வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்தலைமை வகித்தார். அறிவியல் பயிற்சியாளர் தனசேகர் முன்னிலை வகித்தார். மாணவர்கள் அறிவியல் சோதனையை செய்து காண்பித்தனர்.
* திருப்புத்துார் பாபா அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் தின விழா நடந்தது. பள்ளித் தாளாளர் அமீர்பாதுஷா தலைமை வகித்தார். முன்னாள் அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார்.
அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கோபிநாத் மாணவர்களிடையே அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து பேசினார். முதல்வர் வரதராஜன் வரவேற்றார்.