ADDED : ஆக 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்ற அறிவியல் மற்றும் கணித செய்முறை பயிற்சி நடந்தது. ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் கமலம்பாய் வரவேற்றார்.
வானவில் மன்ற கருத்தாளர் ஜெயபிரியா தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி கூற ஆசிரியர்கள் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார்.

