/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில தடகள போட்டி வீரர்கள் தேர்வு
/
மாநில தடகள போட்டி வீரர்கள் தேர்வு
ADDED : ஆக 23, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட தடகள சங்க செயலாளர் சுந்தர் கூறுகையில்:
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 14, 16, 18 மற்றும் 20 வயதிற்குட்பட்ட தடகள விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கான அனைத்து தடகளப் போட்டிகளும் ஆக. 24 மற்றும் 25ம் தேதி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெற்று தகுதி பெறும் வீரர்கள் வரும் செப்டம்பரில் ஈரோட்டில் நடைபெறும் மாநில தடகள போட்டிகளில் சிவகங்கை மாவட்டம் சார்பில் பங்கேற்பார்கள்.
இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் 88707 99470 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இன்று பதிவு செய்வதற்கான கடைசி தேதியாகும்.

