/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கழிவுநீர் கலக்கும் விவசாய கண்மாய் குடிநீருக்கான குழாயிலும் கலப்பு
/
கழிவுநீர் கலக்கும் விவசாய கண்மாய் குடிநீருக்கான குழாயிலும் கலப்பு
கழிவுநீர் கலக்கும் விவசாய கண்மாய் குடிநீருக்கான குழாயிலும் கலப்பு
கழிவுநீர் கலக்கும் விவசாய கண்மாய் குடிநீருக்கான குழாயிலும் கலப்பு
ADDED : மார் 14, 2025 07:25 AM

தேவகோட்டை: செப்டிக் டேங்க் நிரம்பி கண்மாயிலும் குடிநீர் குழாயிலும் கலப்பதால் பொது மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் மனைவிக்கோட்டை ஊராட்சி. ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செய்யானேந்தல் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் உள்ள தண்ணீரை அதங்குடி செய்யானேந்தல் வடக்கு செய்யானேந்தல், செட்டியேந்தல் , கிடுகட்டி கிராமத்தினர் பயன்படுத்து கின்றனர். 180 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த கண்மாயை ஒட்டி அரசு சுங்கச்சாவடியின் பொது கழிப்பறை உள்ளது .கழிப்பறைக்கான செப்டிக் டேங்க் பின்புறம் கண்மாயை ஓட்டி இருக்கிறது. மூடி உடைந்துள்ளதால் செப்டிக் டேங்க் நிரம்பி கண்மாயில் கலக்கிறது. கண்மாய் நீரோடு கலந்து கிராமங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை பயன்படுத்துவோர் அவதிப்படுகின்றனர்.
கண்மாயில் கழிவுநீர் கலப்பது மட்டுமின்றி செப்டிக் டேங்க் கழிவுநீர் கலக்கும் கண்மாயின் ஒரு பகுதியில் ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் அதிகமாகி ஆழ்துளை கிணறு குழாய் வழியாக கழிவுநீர் உள்ளே இறங்கும் நிலை உருவாகியுள்ளது. குடிநீர் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.