/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சித்தர் முத்துவடுகநாதர் கோயில் பாலாபிஷேக திருவிழா
/
சித்தர் முத்துவடுகநாதர் கோயில் பாலாபிஷேக திருவிழா
ADDED : ஏப் 23, 2024 11:52 PM

சிங்கம்புணரி- சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் பாலாபிஷேக திருவிழா நடந்தது.
சிங்கம்புணரியில் மக்களோடு வாழ்ந்து பல்வேறு சித்துக்கள் மூலம் நன்மைகள் புரிந்து ஜீவ சமாதி அடைந்தவர் சித்தர் முத்துவடுகநாதர். இவர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடக்கிறது.
இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாபிஷேகத் திருவிழா நேற்று நடந்தது. சிங்கம்புணரி வணிகர் நலச்சங்கம் சார்பில் காலை 8:30 மணிக்கு சீரணி அரங்கம் அருகே இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பாலைக்கொண்டு சித்தருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் சித்தர் காட்சியளித்தார். நள்ளிரவு சுவாமி திருவீதி உலா நடந்தது.

