/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ஆன்மிக சுற்றுலா தலமாகும்: வேட்பாளர் தேவநாதன் பேச்சு
/
சிவகங்கை ஆன்மிக சுற்றுலா தலமாகும்: வேட்பாளர் தேவநாதன் பேச்சு
சிவகங்கை ஆன்மிக சுற்றுலா தலமாகும்: வேட்பாளர் தேவநாதன் பேச்சு
சிவகங்கை ஆன்மிக சுற்றுலா தலமாகும்: வேட்பாளர் தேவநாதன் பேச்சு
ADDED : ஏப் 12, 2024 10:42 PM
சிவகங்கை : சிவகங்கை அருகே வாணியங்குடி, அரசு போக்குவரத்து கழக கிளை, நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிவகங்கை பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் பிரசாரம் செய்தார்.
பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன்தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, நாட்டரசன், தமிழர் தேச கட்சி ஒன்றியசெயலாளர் ரமேஷ், அ.ம.மு.க., நகர் செயலாளர் அன்புமணி உட்படகூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேட்பாளர் பேசியதாவது:
இந்த தொகுதி வளர்ச்சிக்கான தேர்தல். இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். இதற்கு காரணம் தொழிற்சாலை இல்லை. அ.தி.மு.க.,- தி.மு.க., ஆகிய இரு கட்சிகள் தான் தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துள்ளனர்.
நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்துவிட்டு, பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்தவர் பிரதமர் மோடி. இத்தொகுதி ஆன்மிக, பாரம்பரிய சுற்றுலா தலமாக தரம் உயர்த்தப்படும் .
இவ்வாறு பேசினார்.