/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பை நிரம்பிய சிவகங்கை தெப்பக்குளம்
/
குப்பை நிரம்பிய சிவகங்கை தெப்பக்குளம்
ADDED : மார் 03, 2025 07:18 AM
சிவகங்கை : சிவகங்கை தெப்பக்குளத்தில் குப்பைகளை கொட்டுவதால் கழிவுகள் தேங்கி துார்நாற்றம் வீசுகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பழமையான தெப்பக்குளம்.
இதற்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகப் பகுதியில் சேகரமாகும் மழைநீர் செட்டியூரணி, சாத்தப்ப ஊரணியை நிரப்பி இறுதியாக 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள தெப்பகுளத்தை நிரப்பும். இங்கு தண்ணீர் சேகரமாகுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கடந்த காலங்களில் பெய்த மழையால் தெப்பகுளத்தில் தற்போது தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் மிதக்கிறது. தெப்பகுளத்தின் தெற்கு படித்துறை பகுதிகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. நகராட்சி அதிகாரிகள் அடிக்கடி இந்த தெப்பகுளத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினாலும் சிலர் தொடர்ந்து குப்பைகளை தெப்பகுளத்திற்குள் கொட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து தெப்பகுளத்தை பாதுகாக்க வேண்டும்.