ADDED : ஏப் 12, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகரில் இருந்து கல்லூரி சாலை மற்றும் பர்மா காலனி செல்லும்
சாலை பல ஆண்டுகளாக மின்விளக்கு இன்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது. காரைக்குடி நகரின் முக்கிய நுழைவு வாயிலான இச்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அரசு வேலைக்கு பயிற்சி வழங்கும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் உள்ளதால் மாணவிகள் இப்பகுதியில் தங்கி படிக்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இச்சாலையில் நடந்து செல்கின்றனர். தவிர வெளியூர், உள்ளூர் வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. எப்போதும் பரபரப்பாக உள்ள சாலையில் மின்விளக்கு இல்லை.

