/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தேங்கும் மழை நீர் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்
/
மானாமதுரையில் தேங்கும் மழை நீர் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்
மானாமதுரையில் தேங்கும் மழை நீர் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்
மானாமதுரையில் தேங்கும் மழை நீர் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்
ADDED : ஆக 18, 2024 06:38 AM

மானாமதுரை : மானாமதுரை கண்ணார் தெரு குட்டைக்கரையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு பகுதியான குட்டைக்கரையை ஒட்டிய மதுரா நகரில் குடியிருப்புகள்உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நீர் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உருவாகி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சிலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாலும் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
25வது வார்டு கவுன்சிலர் நாகஜோதி கூறியதாவது:
குட்டைக்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள மதுரா நகர் பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நகராட்சி அதிகாரிகள் மக்களின் நலன் கருதி தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.