ADDED : ஆக 12, 2024 04:36 AM

சிவகங்கை : தமிழ்நாடு அமெச்சூர் மல்லர் கம்பம் சங்கம் மற்றும் சிவகங்கை மாவட்ட மல்லர் கம்பம் சங்கம் இணைந்து மாநில மல்லர் கம்பம் போட்டியை நடத்தியது.
சர்வதேச நடுவர் செல்வபிரகாஷ் தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் போட்டிகளை துவக்கி வைத்தார். 17 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 225, மாணவிகள் 175 பேர் என 400 பேர் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. வயது 6 முதல் 18 வரை 5 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் போட்டியிட்டனர்.
இதில் மல்லர் கம்பம், மல்லர் கயிறு, தொங்கும் மல்லர் கம்பம், பிரமிடு வகையிலான போட்டிகள் நடந்தது. போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.