/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சலவையகம், ஆடையகம் அமைக்க மானியம்
/
சலவையகம், ஆடையகம் அமைக்க மானியம்
ADDED : ஆக 28, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : பிற்பட்ட, மிக பிற்பட்டோர், சீர்மரபினர் பொருளாதார முன்னேற்றம் பெற நவீன சலவையகம், ஆயத்த ஆடையகம் யூனிட் அமைக்க மானியம் வழங்குகிறது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நவீன சலவையகம் அமைக்க தேவையான இயந்திரம், மூலப்பொருள், நிகழ்வுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்காக விண்ணப்பிக்க 10 பேர் கொண்ட குழுவாக இருக்கலாம். இக்குழு உறுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கையில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.

