/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழி சாலையில் முட்செடியால் அவதி
/
நான்கு வழி சாலையில் முட்செடியால் அவதி
ADDED : ஆக 19, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : பரமக்குடி 4 வழிச்சாலை ரோட்டின் நடுவே சென்டர் மீடியன் அமைக்காததால், முட்செடிகள் வளர்ந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மதுரை -- ராமேஸ்வரம் 4 வழிச்சாலை மானாமதுரை வழியாக செல்கின்றன. இந்த ரோட்டில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மானாமதுரை, மேலப்பசலை மேம்பாலம் அருகே சென்டர் மீடியன் அமைக்கப்படவில்லை.
இந்த இடங்களில் முட்செடிகள் வளர்ந்து கிடக்கின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இங்கு வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி, சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.