/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் செலவு கணக்கு ஒத்திசைவு ஏப்.10ல் 2ம் கட்ட பணி
/
தேர்தல் செலவு கணக்கு ஒத்திசைவு ஏப்.10ல் 2ம் கட்ட பணி
தேர்தல் செலவு கணக்கு ஒத்திசைவு ஏப்.10ல் 2ம் கட்ட பணி
தேர்தல் செலவு கணக்கு ஒத்திசைவு ஏப்.10ல் 2ம் கட்ட பணி
ADDED : ஏப் 07, 2024 05:49 AM
சிவகங்கை, : சிவகங்கையில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2ம் கட்ட செலவு கணக்குகளை ஏப்., 10ல் ஒத்திசைவு செய்ய வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வேட்பாளர்களின் அன்றாட செலவு கணக்கு விபரங்களை ஏப்.,5, 10 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களில் ஒத்திசைவு செய்ய வேண்டும்.
2ம் கட்ட தேர்வு செலவின ஒத்திசைவு ஏப்., 4 முதல் 8ம் தேதி வரையிலான 2ம் கட்ட செலவு விபரங்களை வேட்பாளர், அவர்களது ஏஜன்ட்கள் ஏப்.10ல் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கலெக்டர் பி.ஏ.,(கணக்கு) விடம் ஒத்திசைவு செய்ய வேண்டும்.
அதன்படி அன்றைய தினம் காலை 10:00 மணிக்கு காங்., வேட்பாளர், காலை 11:00 மணிக்கு அ.தி.மு.க., வேட்பாளர், மதியம் 12:00 மணிக்கு பா.ஜ., வேட்பாளர், மதியம் 1:00 மணிக்கு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர், மதியம் 2:00 மணிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர், மதியம் 3:00 மணிக்கு முதல் சுயேச்சை வேட்பாளர்கள் செலவு விபரங்களை ஒத்திசைவு செய்ய நேரம்ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.

