/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை
/
காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை
காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை
காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை
ADDED : மார் 06, 2025 05:16 AM

காரைக்குடி: காரைக்குடி தாலுகா அலுவலகம் முன்பு பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 18 படி நகர், பாரதி நகர், சூடாமணிபுரம், அழகப்பாபுரம், வள்ளலார் தெரு, சாமியார் தோட்டம் முத்துராமலிங்க தேவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக மனு அளிக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தினர். மக்கள் பட்டா வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மூலம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.