/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
/
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 27, 2024 04:25 AM
சிவகங்கை: இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஆக.25ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அ.சங்கர் கூறியதாவது:
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பழைய ஓய்வூதியத் திட்டம் அரசியல் பிரச்னையாக மாறி கடந்த லோக்சபா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகத் திரும்ப வழங்க வேண்டும்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழகத்தில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம், என்றார்.