/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழையனுார்-ஓடாத்துார் இடையே பாலம் கட்டும் பணி சுணக்கம்
/
பழையனுார்-ஓடாத்துார் இடையே பாலம் கட்டும் பணி சுணக்கம்
பழையனுார்-ஓடாத்துார் இடையே பாலம் கட்டும் பணி சுணக்கம்
பழையனுார்-ஓடாத்துார் இடையே பாலம் கட்டும் பணி சுணக்கம்
ADDED : ஆக 20, 2024 07:19 AM

பழையனூர் : பழையனூர் - - ஓடாத்தூர் இடையே கிருதுமால் நதியில் பாலம் கட்டுமான பணிகளை மழை காலத்திற்குள் முடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பழையனூர் - ஓடாத்தூர் இடையே கிருதுமால் நதி செல்கிறது. மழை காலங்களிலும், கிருதுமால் நதியிலும் தண்ணீர் திறப்பின் போதும் எட்டு கிராமங்களுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் கிராமமக்கள் மருத்துவம் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
மேலும் இப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பழையனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர். மழை காலங்களில் கிருதுமால் நதியில் 8 அடி உயரத்தில் தண்ணீர் செல்வதால் மாணவ, மாணவிகள் பலரும் பள்ளி செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கிவிடுவர்.
கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை அடுத்து கடந்த 2023 ஜூலையில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.3.5 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலம் கட்டும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது.
பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. செப்டம்பரில் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பாலப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.