/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காங்., வெற்றிக்கு 'கை' கொடுத்த அமைச்சர் தொகுதி அதிக ஓட்டு பட்டியலில் முதலிடம்
/
காங்., வெற்றிக்கு 'கை' கொடுத்த அமைச்சர் தொகுதி அதிக ஓட்டு பட்டியலில் முதலிடம்
காங்., வெற்றிக்கு 'கை' கொடுத்த அமைச்சர் தொகுதி அதிக ஓட்டு பட்டியலில் முதலிடம்
காங்., வெற்றிக்கு 'கை' கொடுத்த அமைச்சர் தொகுதி அதிக ஓட்டு பட்டியலில் முதலிடம்
ADDED : ஜூன் 07, 2024 05:14 AM
சிவகங்கை: சிவகங்கையில் காங்., வெற்றிக்கு அதிக ஓட்டுக்களை பெற்று தந்து அமைச்சர் பெரியகருப்பனின் திருப்புத்துார் தொகுதி, கார்த்தி வெற்றிக்கு 'கை' கொடுத்துள்ளது.
சிவகங்கை தொகுதி எம்.பி., தேர்தலில் காங்., வேட்பாளர் கார்த்தி 4,27,677 ஓட்டுக்களை பெற்று, 2,05,664 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இண்டியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு தி.மு.க., மாவட்ட செயலாளர்கள், கட்சியினர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தேர்தல் முடிவில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
காங்.,க்கு கை கொடுத்த அமைச்சர்
ஆரம்பத்தில் காங்., வேட்பாளர் கார்த்தி-க்கு சீட் ஒதுக்கியதால், அதிருப்தியில் இருந்த தி.மு.க.,வினர் தேர்தல் பிரசார நேரத்தில் அமைச்சர் பெரியகருப்பன் வழிகாட்டுதல் மற்றும் அவரது ஆலோசனையில் ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பனுக்கு, ஆதரவு அளித்து வரும் திருப்புத்துார் தொகுதி, எம்.பி., தேர்தலிலும் அதே ஆதரவை காங்., வேட்பாளருக்கு அளித்துள்ளது. காங்., வேட்பாளர் கார்த்தி-க்கு அதிக ஓட்டு கிடைத்த சட்டசபை தொகுதி பட்டியலில், அமைச்சரின் திருப்புத்துார் தொகுதி முதலிடம் பிடித்துள்ளது.
திருப்புத்துாரில் காங்.,க்கு அதிக ஓட்டு
சிவகங்கை லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபையில் திருப்புத்துார் தான் (77,613 ஓட்டு) அதிக ஓட்டுக்களை பெற்று தந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
2வது இடத்தில் காரைக்குடி 76,767 ஓட்டு, 3வது இடத்தில் மானாமதுரை 70,132 ஓட்டு, 4 வது இடத்தில் ஆலங்குடி 69,244 ஓட்டு, 5 வது இடத்தில் சிவகங்கை 66,464 ஓட்டு, 6 வது இடத்தில் திருமயம் 65,411 ஓட்டுக்களை பெற்று தந்துள்ளது.
இத்தேர்தல் முடிவை அடுத்து காங்., வேட்பாளர் கார்த்தி வெற்றி பெற்றதோடு, அதிக ஓட்டுக்கள் பெற்றுத்தந்த முதல் தொகுதி திருப்புத்துார் என்பதால், காங்.,-ன் வெற்றிக்கு அமைச்சர் கைகொடுத்தது, கட்சி தலைமையிடத்திலும், காங்., மற்றும் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் இடத்திலும் நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.
தி.மு.க.,விடமிருந்து கை நழுவும் சிவகங்கை
அதே நேரம் 2026 சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியிலும் தி.மு.க.,வினர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால், சிவகங்கை தொகுதி தி.மு.க.,விற்கு சாதகமாக இல்லாததால், இதை எப்படி சமாளித்து தி.மு.க., தலைமை, சிவகங்கையில் தி.மு.க.,வில் வேட்பாளரை அறிவிக்குமா, அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விடுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.