/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செயின் பறிக்க முயற்சி போராடி தப்பிய மூதாட்டி
/
செயின் பறிக்க முயற்சி போராடி தப்பிய மூதாட்டி
ADDED : ஜூலை 10, 2024 05:54 AM

கீழடி, : கீழடி அருகே கட்டமன்கோட்டை பெட்டி கடையில் கூல்டிரிங்ஸ் வாங்குவது போல செயின் பறிக்க முயன்ற இளைஞரை போராடி மூதாட்டி இளைஞரை பிடித்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
கட்டமன்கோட்டையைச் சேர்ந்த ஆதிமூலம் மனைவி சின்னபொன்னுத்தாயி 65, கட்டமன்கோட்டையில் பெட்டி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் கடைக்கு டூவீலரில் வந்த இளைஞர்களில் ஒருவர் வண்டியிலேயே காத்திருக்க ஒருவர் மட்டும் வந்து கூல்டிரிங்ஸ் கேட்டுள்ளார்.
இல்லை என கூறவும் தண்ணீர் பாட்டிலாவது தாருங்கள் என கேட்டு தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுத்த போது கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார்.
சிவபொன்னுத்தாயி இளைஞரின் பனியனை பிடித்து கூச்சலிட்டுள்ளார், ஆத்திரமடைந்த இளைஞர் செயினை கீழே போட்டு விட்டு சிவபொன்னுத்தாயின் முகத்தில் குத்தியுள்ளார். ஆனாலும் விடாப்பிடியாக சின்னபொன்னுத்தாயி கூச்சலிடவே கிராம மக்கள் திரண்டனர்.
மற்றொரு இளைஞர் தப்பி விட்டார். பிடிபட்ட இளைஞரை திருப்புவனம் போலீசில் ஒப்படைத்தனர்.
சின்னபொன்னுத்தாயை இளைஞர் தாக்கியதில் காயமடைந்ததை அடுத்து திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் பிடிபட்ட இளைஞர் மதுரையைச் சேர்ந்த நல்ல முருகன் 21 என தெரிய வந்தது.