ADDED : மே 18, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : சிவகங்கை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுத்தும் தேவகோட்டையில் மழையே இல்லை. நான்கு தினங்களாக இரவு மின்னல் தொடர்ந்து ஒளிர்கிறது. லேசான இடியும் தொடர்கிறது. ஒரு துளி கூட மழை பெய்யல்லை. பகலில் வெயில் காணப்பட்டது. ஒரு நாள் மட்டும் கருமேகம் சூழ்ந்து இரவு போல் இருந்தது. இப்படியெல்லாம் மிரட்டியும் மழை பெய்யவில்லை.
சில தினங்களுக்கு முன் பத்து கி.மீ., துாரத்தில் பிணத்தை தோண்டி எடுக்க முடியாத வகையில் அதிகாரிகள் நனைய காட்டில் கொட்டி தீர்த்தது மழை. ஆனால் தேவகோட்டை பகுதியில் ஒரு துளி மழை துாறல் கூட இல்லாதது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பை தொடர்ந்து கோடை விவசாயம் செய்யலாம் என தயார்படுத்தி வந்த விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

