/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
/
இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ADDED : ஏப் 26, 2024 12:56 AM

காரைக்குடி : காரைக்குடியில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்குடி வடிவேலு அம்பலம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் ஆறுமுகம் 37. இவர், ஏப்.21ம் தேதி
பைக்கில் சென்ற போது சரக்கு வேன் மீது மோதியதில் காயமடைந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ஆறுமுகம் அன்று இரவு காரைக்குடி என். புதுாரில் உள்ள ஒரு வீட்டின் கதவை தவறுதலாக தட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர் காரைக்குடி தெய்வராயன் செட்டியார் தெருவை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி சண்முகமணிக்கு 45, தகவல் அளித்துள்ளனர்.
அங்கு வந்த சண்முகமணி, சிலர் ஆத்திரத்தில் ஆறுமுகத்தை தாக்கினர். ஆறுமுகம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகனை சண்முகமணி மற்றும் ஸ்ரீராம் 26 இருவரும் அடித்ததால் தான் மகன் இறந்து விட்டதாக ஆறுமுகத்தின் தந்தை கருப்பையா காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து உடல் நேற்று காரைக்குடி இடையர் தெருவிற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் சமாதானம் ஆகாததால் இறந்தவரின் உடல் மீண்டும் மதுரை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

