/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளிக்குள் கூச்சல் எழுப்பிய மாணவர்கள் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் மீது புகார்
/
பள்ளிக்குள் கூச்சல் எழுப்பிய மாணவர்கள் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் மீது புகார்
பள்ளிக்குள் கூச்சல் எழுப்பிய மாணவர்கள் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் மீது புகார்
பள்ளிக்குள் கூச்சல் எழுப்பிய மாணவர்கள் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் மீது புகார்
ADDED : ஆக 23, 2024 03:06 AM
மானாமதுரை:மானாமதுரை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் - ஆசிரியர்களுக்குள் ஏற்படும் மோதலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த போலீசார் மீது மாணவர்களில் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்ததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 10 வருடங்களுக்கு முன்பு வரை 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். சில ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆசிரியர்களுக்குள்ளும், மாணவர்களுக்குள்ளும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் மாணவர் எண்ணிக்கை குறைந்து 340 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டதல் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து பள்ளி முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிளஸ் 1 படிக்கும் சில மாணவர்கள் வகுப்பறைகளுக்குள்ளும் ஆசிரியர் அறைக்குள்ளும் சென்று கூச்சல் போட்டுள்ளனர். வெளியே நின்றிருந்த போலீசாரை ஆசிரியர்கள் அழைத்து மாணவர்களை கண்டிக்குமாறு கூறினர். போலீசார் மாணவர்களை எச்சரித்து சென்றனர்.
இந்நிலையில் போலீசார் தங்களை தாக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒரு தரப்பு மாணவர்கள் கூறி வருகின்றனர்.
இது குறித்து எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: பள்ளி முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆசிரியர்கள் அழைத்ததை பள்ளிக்குள் சென்று மாணவர்களை எச்சரிக்க மட்டுமே செய்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டவோ பயமுறுத்தவோ இல்லை என்று கூறியுள்ளனர்.
பெற்றோர்கள் கூறியதாவது: பள்ளியில் ஆசிரியர்களே தனித்தனி குழுவாக பிரிந்து மாணவர்களை வைத்து தினந்தோறும் மோதல்களை உருவாக்கி வருகின்றனர். மாணவர் சேர்க்கை குறைந்து, கல்வித்திறனும் பாதிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.