/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகளிர் பள்ளியில் மைதானம் இல்லைமாணவிகள் விளையாட வழியில்லை
/
மகளிர் பள்ளியில் மைதானம் இல்லைமாணவிகள் விளையாட வழியில்லை
மகளிர் பள்ளியில் மைதானம் இல்லைமாணவிகள் விளையாட வழியில்லை
மகளிர் பள்ளியில் மைதானம் இல்லைமாணவிகள் விளையாட வழியில்லை
ADDED : ஆக 05, 2024 10:01 PM
மானாமதுரை, -மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதிய இட வசதி, கழிப்பறை, மைதானம் இல்லாத காரணத்தால் மாணவிகள் சிரமப்படுகின்றனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளிலிருந்தும், இளையான்குடி அருகே உள்ள கிராம பகுதிகளிலிருந்தும், நகர்புற பகுதிகளிலிருந்தும் 1920 மாணவிகள் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படுவதால் வருடம் தோறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இப்பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகளுக்கு 48 வகுப்பறைகள் இருக்க வேண்டிய இடத்தில் 32 வகுப்பறை மட்டுமே உள்ளது.
ஒவ்வொரு வகுப்பறையிலும் 40 மாணவிகள் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் தற்போது ஒவ்வொரு வகுப்பறையிலும் 60 மாணவிகள் உள்ளனர். வகுப்பறைகளில் இடவசதி இல்லாமல் மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் கழிப்பறையும் போதிய அளவிற்கு இல்லாத காரணத்தினால் ஏராளமான மாணவிகள் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்ற இயற்கை உபாதையை கழிக்க வேண்டியுள்ளதால் மாணவிகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போவதாக பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இப்பள்ளியில் மைதானங்கள் இல்லாததால் மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பலர் வெற்றி பெற்றுள்ளனர். மைதானம் இருந்தால் இன்னும் அதிகளவில் வெற்றிகளை குவிக்க முடியும் என்று ஆதங்கப்படுகின்றனர்.
பெற்றோர்கள் சிலர் கூறியதாவது: இங்கு மட்டும் தான் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படும் நிலையில் வருடம் தோறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இப்பள்ளிக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை மாற்றி விட்டு பள்ளியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.