/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயிலில் திருடியவர்கள் வாகன சோதனையில் கைது
/
கோயிலில் திருடியவர்கள் வாகன சோதனையில் கைது
ADDED : ஆக 20, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சடையம்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் பாலமுருகன் 35, கண்ணங்குடி மாரி மகன் பூமி 40. இருவரும் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டை ஆதினமிளகி அய்யனார் கோயிலில் உள்ள உண்டியலில் கம்பில் பசை தடவி உண்டியலில் உள்ள ரூ.2 ஆயிரத்து 186 பணம் மற்றும் குடம் ஒன்றை திருடியுள்ளனர்.
ஹிந்து அறநிலைத்துறை மண்டல செயல் அலுவலர் மஹேந்திர பூபதி மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் கல்லல் அருகே வாகன சோதனையில் பாலமுருகன், பூமியை கைது செய்தனர்.