/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை வாரச்சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை
/
சிவகங்கை வாரச்சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை
ADDED : மே 27, 2024 05:54 AM
சிவகங்கை : சிவகங்கை தாலுகா ரோட்டில் உள்ள வாரச்சந்தை கட்டுமான பணியை விரைந்து முடித்து சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கையில் புதன் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சிவகங்கை,திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
இந்த சந்தையில் கூரை இல்லாமல் இருந்தது. வாரச்சந்தைக்குள் புதிதாக கடைகள் கட்டவும் கூரை அமைக்கவும் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.89 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
சந்தை கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளது. வியாபாரிகள் புதனன்று தாலுகா அலுவலக ரோட்டிலும் சிவன் கோவில் பகுதியிலும் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது மழைபெய்து வருவதால் ரோட்டில் விற்பனை செய்வது மிகவும் சிரமமாக உள்ளது.
மேலும் ரோட்டில் வைத்து விற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சந்தை கட்டுமான பணியை விரைந்து முடித்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், மே இறுதிக்குள் கட்டுமானப்பணியை முடிக்க ஒப்பந்ததாரரிடம் கூறியுள்ளோம்.
கட்டுமானப்பணியும் முடியும் தருவாயில் உள்ளது.
இந்தமாத இறுதிக்குள் கட்டுமானம் முடிக்கப்பட்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

