/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குலதெய்வ வழிபாட்டுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி பயணம்
/
குலதெய்வ வழிபாட்டுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி பயணம்
குலதெய்வ வழிபாட்டுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி பயணம்
குலதெய்வ வழிபாட்டுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி பயணம்
ADDED : ஜூலை 19, 2024 11:50 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கிராம மக்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர்.
திருப்புத்துார் அருகே திருக்கோளக்குடியைச் சேர்ந்த யாதவர்கள் சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து குடிபெயர்ந்து சிங்கம்புணரி அருகே மணப்பட்டியில் குடியேறினர்.
பின்னர் சிங்கம்புணரி, வேங்கைப்பட்டி, சிவபுரிபட்டி ஆகிய இடங்களிலும் அவர்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடிப்படைப்பு திருவிழாவையொட்டி 40 கி.மீ., துாரமுள்ள திருக் கோளக்குடியில் உள்ள தங்கள் குலதெய்வ கோயிலுக்கு மாட்டு வண்டிகளில் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்தாண்டும் ஜூலை 18 ம் தேதி இரவு சிவபுரிபட்டி வயிற்றுப் பிள்ளையார் கோயில் அருகே ஒன்று கூடிய கிராமத்தினர் தங்களது பங்காளிகள், உறவினர்களுடன் மாட்டு வண்டிகளில் திருக்கோளக்குடி புறப்பட்டு சென்றனர்.
நேற்று காலை பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து இரவு 50 ஆடுகளை அங்குள்ள கருப்பருக்கு பலி கொடுத்து வழிபட்டனர்.
அங்குள்ள பொன்னழகி அம்மன் கோயிலில் தங்கள் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு காதணி விழாவையும் நடத்தினர்.
இன்று காலை முதல் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்படும். விருந்து முடிந்ததும் மீண்டும் மாட்டு வண்டியிலேயே ஊர் திரும்ப உள்ளனர்.