/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
/
திருப்புவனத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
திருப்புவனத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
திருப்புவனத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 15, 2024 04:18 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் நகரைச்சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பலரும் பல்வேறு தேவைகளுக்காக திருப்புவனம் வந்து செல்கின்றனர். இதுதவிர திருப்புவனத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஐயாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கார், டூவீலர், பஸ், ஷேர் ஆட்டோ உள்ளிட்டவற்றில் வந்து செல்கின்றனர்.
தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் இருபுறமும் ஒரு கி.மீ., துாரத்திற்கு அணிவகுத்து நிற்கும். போக்குவரத்து போலீசார் இருந்தாலும் நெரிசலை தவிர்க்கவே முடியவில்லை. இதுதவிர முகூர்த்த நாட்கள், திருவிழா நாட்களில் நகரவே முடியாது.
திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆயிரம் வாகனங்கள் சென்று வந்த பாதையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கிராமங்களில் இருந்து வரும் பலரும் தங்களது டூவீலர்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு வெளியூர் சென்று விடுகின்றனர். நாள் முழுவதும் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்களால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தினசரி நரிக்குடி ரோட்டில் வாகனங்கள் திரும்ப முடியாமல் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுக்கின்றன. நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு பெரும்பாலான வாகனங்கள் பைபாஸ் ரோட்டிலேயே சென்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவே முடியவில்லை.
தானியங்கி சிக்னல், ஒருவழிப்பாதை என புதிய திட்டங்கள் கொண்டு வரவேண்டும். எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் துறை நிர்வாகம் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.