/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் புதிய டி.எஸ்.பி., தீர்வு காண வலியுறுத்தல்
/
திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் புதிய டி.எஸ்.பி., தீர்வு காண வலியுறுத்தல்
திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் புதிய டி.எஸ்.பி., தீர்வு காண வலியுறுத்தல்
திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் புதிய டி.எஸ்.பி., தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2024 05:24 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நீண்ட நாட்களாக தொடரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மானாமதுரை கோட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள டி.எஸ்.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் நகரைச்சுற்றிலும் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பலரும் திருப்புவனம் வந்து செல்கின்றனர். திருப்புவனத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் இருபுறமும் ஒரு கி.மீ.,துாரத்திற்கு நிற்கின்றன. போக்குவரத்து போலீசார் இருந்தாலும் நெரிசலை தவிர்க்கவே முடியவில்லை. முகூர்த்த நாட்கள், திருவிழா நாட்களில் நகரவே முடியாது.
அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று காலை ஒன்பது மணிக்கு திருப்புவனத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் போலீஸ் ஸ்டேஷனையும் தாண்டி வாகனங்கள் அணிவகுத்து நின்றன அதன்பின் போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
நாள் முழுவதும் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஐந்தரை மீட்டர் அகலமுள்ள சாலை ஆக்கிரமிப்பு,வாகன பார்க்கிங் உள்ளிட்டவற்றால் இரண்டு மீட்டராக சுருங்கிவிட்டது. எதிரே எதிரே வாகனங்கள் வந்தால் விலக கூட இடமில்லை.
தினசரி நரிக்குடி ரோட்டில் வாகனங்கள் திரும்ப முடியாமல் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுக்கின்றன. நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு பெரும்பாலான வாகனங்கள் பைபாஸ் ரோட்டிலேயே சென்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவே முடியவில்லை. தானியங்கி சிக்னல், ஒருவழிப்பாதை என புதிய திட்டங்கள் கொண்டு வரவேண்டும்.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மானாமதுரை கோட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.எஸ்.பி., நிரேஷ் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.