/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலர்கள் மோதல் கான்ட்ராக்டர் பலி
/
டூவீலர்கள் மோதல் கான்ட்ராக்டர் பலி
ADDED : ஆக 07, 2024 07:37 AM
தேவகோட்டை : தேவகோட்டை சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் பூமிநாதன்.79., கான்ட்ராக்டர் தொழில் செய்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து டூவீலரில் கோயில் விழாவில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிக்காக வந்துள்ளார்.
காடேரியம்பாள் நகர் அருகில் வரும்போது பின்புறமாக காரைக்குடி ரோட்டில் வந்த டூவீலர் பூமிநாதன் டூவீலர் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஓட்டிய நபர் ஓடிவிட்டார்.
இந்த விபத்தில் காயமடைந்த பூமிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோதிய டூவீலரை ஓட்டி வந்தது சிறுவன் என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். சிசி டிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இருவர் காயம்
தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வாகன டிரைவர். மானாமதுரை ஆறுமுகம் மகன் மருதுபாண்டியன் 46, இவர் நேற்று மாலை டூவீலரில் தேவகோட்டை ராம்நகரிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காரைக்குடி செல்லும் ரோட்டில் திரும்பினார். அந்த ரோட்டில் எதிரே தேவகோட்டைக்கு ஆறாவயல் பஞ்சநாதன் மகன் நாட்டான் 23., ஓட்டி வந்த டூவீலர் டிரைவர் மருதுபாண்டியன் டூவீலரில் மீது மோதியது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.