/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பில்லாத பரிசோதகர் ஓய்வறை
/
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பில்லாத பரிசோதகர் ஓய்வறை
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பில்லாத பரிசோதகர் ஓய்வறை
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பில்லாத பரிசோதகர் ஓய்வறை
ADDED : ஜூலை 07, 2024 02:17 AM

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகர்கள் ஓய்வெடுக்க முடியாத நிலையில் ஓய்வறை பராமரிப்பின்றி அசுத்தமாக காணப்படுகிறது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் முக்கிய ரயில்வே சந்திப்பாக திகழ்ந்து வருகிறது. மானாமதுரை வழியாக தினமும் பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் சென்று வருகின்றன.
இந்த ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்களாக பணிபுரிபவர்களுக்கு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் தங்கி ஓய்வெடுப்பதற்காக ஓய்வறை உள்ளது.இங்கு கடந்த சில மாதங்களாக துாய்மை மற்றும் மராமத்து பணி நடைபெறாத காரணத்தினால் டிக்கெட் பரிசோதகர்கள் தங்கி ஓய்வெடுக்க முடியாத நிலையில் சிரமப்படுகின்றனர்.
ஓய்வறையில் படுக்கை, தலையணை மற்றும் விரிப்பு மிகவும் அசுத்தமாகபயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாலும், குளிர்சாதன இயந்திரம்இயங்காத காரணத்தினாலும் நீண்ட நேரமாக பணிபுரிந்து ஓய்வெடுக்க வரும் பரிசோதகர்கள் ஓய்வெடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
இரவில் ரயில்களில் 8 மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரிந்து விட்டு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஓய்வெடுப்பதற்காக வந்தால் ஓய்வறை மிகவும் அசுத்தமாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.
மின்விசிறிகள் எப்போது கீழே விழுமோ என்ற நிலை இருப்பதால் ஒருவித அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது. ரயில்வே நிர்வாகத்தினர் மானாமதுரை ஓய்வறையை சீரமைத்து அங்குள்ள படுக்கைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.