/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயனற்ற பெயர் பலகை பயணிகள் குழப்பம்
/
பயனற்ற பெயர் பலகை பயணிகள் குழப்பம்
ADDED : ஏப் 04, 2024 04:58 AM

காரைக்குடி : சாக்கோட்டை மற்றும் கல்லல் சுற்றுவட்டார பகுதிகளில், ஊர் பெயர் பலகைகள் மற்றும் வழிகாட்டிகள் சேதமடைந்து பெயர் அழிந்து கிடப்பதால் பயணிகள் குழப்பமடைகின்றனர்.
காரைக்குடி மற்றும் சாக்கோட்டை, கல்லல் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
அந்தந்த ஊர்களின் பெயர்களை அறிந்து கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுலாத் துறை சார்பில் ஊர் எல்லையில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
மூன்று மற்றும் நான்கு சாலை சந்திப்புகளில் வழிகாட்டியும் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பல கிராமங்களில் ஊரின் பெயர் பலகைகள் மற்றும் வழிகாட்டி முற்றிலுமாக அழிந்து சேதமடைந்து கிடக்கிறது.
ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் திணறி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம பெயர் பலகை மற்றும் வழிகாட்டி பலகைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

