/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் வசதி இல்லாத வடகுடி கிராம மக்கள்
/
பஸ் வசதி இல்லாத வடகுடி கிராம மக்கள்
ADDED : மே 27, 2024 05:48 AM

காரைக்குடி : பள்ளத்துார் அருகேயுள்ள வடகுடியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகுடி ஊராட்சியில் மணச்சை மற்றும் கருவியப்பட்டி ஆகிய சிற்றுார் உள்ளன. இவ்வூராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
வடகுடி கிராமத்தில் 120 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. வடகுடி மக்கள் மணச்சையில் உள்ள ரேஷன் கடைக்காக பலமைல் துாரம் அலைய வேண்டியிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் தற்போது மாதம் ஒருமுறை மட்டும் தற்காலிகமாக ரேஷன் கடை ஊழியர்கள் வடகுடி வந்து செல்கின்றனர்.
ரேஷன் கடை கட்டடம் இல்லாததால் வடகுடி கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.
மேலும், காரைக்குடி வடகுடி வழியாக கருவியப்பட்டி வரை டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. பால வேலை நடப்பதாக கூறி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பஸ் நிறுத்தப்பட்டது. பால வேலை முடிந்து சாலை அமைக்கப்பட்டும் பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை.
கிராம மக்கள் கூறுகையில்: வடகுடிக்கு வந்த பஸ் நிறுத்தப்பட்டு, பல ஆண்டுகளாகியும் மீண்டும் இயக்கப்படவில்லை. சந்தை, மருத்துவமனை உட்பட அனைத்து தேவைகளுக்கும் பள்ளத்துார் அல்லது காரைக்குடி செல்ல வேண்டியுள்ளது.
பஸ் வசதி இல்லாததால் ஏழை மக்கள் பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
மீண்டும் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் ஒருமுறை மட்டுமே ரேஷன் கடை நடத்தப்படுவதால் அன்றைய தினம் அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்க முடிவதில்லை.
சிலர் வேலை காரணமாக வெளியூர் சென்றால் ரேஷன் பொருள் வாங்க காத்துக் கிடக்கும் சூழல் நிலவுகிறது. நிரந்தரமாக ரேஷன் கடை கட்டடம் அமைத்து, ரேஷன் கடை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

