/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை
/
சிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை
ADDED : ஆக 27, 2024 06:30 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது.
யாகம் நடத்தப்பட்டு பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார்.
பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கு உமாபதி சிவாச்சாரியார் தேய்பிறை அஷ்டமி பூஜையை நடத்தி வைத்தார்.
மணப்பட்டி நாய்க்குட்டியான் கோயிலில் பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகர் பிருத்தியங்கிரா தேவி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அட்சய மகா கணபதி, அத்தி வராஹி அம்மன், பிருத்தியங்கிரா தேவிக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தேய்பிறை அஷ்டமி என்பதால் சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.
தேவகோட்டை நகரில்மாலையில் ஸ்வர்ண ஆஹார்சன பைரவருக்கு சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன.