/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவு மண்
/
அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவு மண்
அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவு மண்
அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவு மண்
ADDED : ஆக 16, 2024 04:24 AM

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவு மண்ணை கொட்டி வைத்துள்ளதால், நோயாளிகள், உதவியாளர்கள் வளாகத்தில் நடக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அஸ்திவாரம் அமைக்க தோண்டப்பட்ட கழிவு மண்ணை வளாகத்திற்குள்ளேயே குவித்து வைத்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் கழிவு மண் கரைந்து சகதியாக மாறிவிட்டன. இதனால், மருத்துவமனை வளாகத்திற்குள் செல்ல முடியாமல் நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் தவித்து வருகின்றனர். திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் ரோடு விபத்து, தற்கொலை செய்து கொள்வோரின் உடலை மருத்துவமனை வளாகத்திற்குள் கொண்டு வர முடியாமல் சிரமம் அடைகின்றனர். எனவே மருத்துவமனை நிர்வாகம், வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவு மண்ணை அகற்ற வேண்டும்.
////