/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழை பெய்தும் நிரம்பாத நீர்நிலைகள்
/
மழை பெய்தும் நிரம்பாத நீர்நிலைகள்
ADDED : மே 17, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் 14 செ.மீ., அளவுக்கு கனமழை பெய்தும் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பாதது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இப்பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குளம், ஊருணி, கண்மாய்கள் உள்ளன. மே 15ஆம் தேதி இப்பகுதியில் கனமழை பெய்து 14 செ.மீ., அளவிற்கு பதிவாகியுள்ளது.
ஆனால் இவ்வளவு மழை பெய்தும் சிங்கம்புணரி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளில் போதுமான அளவு தண்ணீர் தேங்கவில்லை.
வரத்து கால்வாய்கள் அடைபட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்ததால் தண்ணீர் நீர்நிலைகளுக்கு செல்லாமல் வீணாகி வெளியேறி விட்டது.

