/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுவயல் அரிசி ஆலைகளை புத்துயிர் பெற செய்வேன்: அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ் வாக்குறுதி

ADDED : ஏப் 03, 2024 06:46 AM

சிவகங்கை : புதுவயல் பகுதியில் உள்ள நவீன அரிசி ஆலைகளை புத்துயிர் பெற செய்வதற்கான திட்டங்களை கொண்டு வருவேன் என சிவகங்கை அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ் பேசினார்.
சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடி நகர், சாக்கோட்டை ஒன்றியத்தில் அரியக்குடி, அமராவதிபுதுார், புதுவயல், பள்ளத்துார், கானாடுகாத்தான் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாஸ் பிரசாரம் செய்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். வேட்பாளர் பேசியதாவது:
சாக்கோட்டையில் மல்லிகை பூக்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு கட்டப்படும். புதுவயல் அரிசி ஆலைகள் புத்துயிர் பெற செய்ய, ஆலை அதிபர்களுக்கு வங்கி கடன் கிடைக்க செய்வேன். நுாறு நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.4000 கிடைக்க செய்வோம்.
வெளிநாடுகளில் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கென தனி வாரியம் அமைத்து, பெர்மிட் மீண்டும் கிடைக்க செய்வேன். செட்டிநாடு பாரம்பரிய சுற்றுலா தளம் தரம் உயர்த்தப்படும். காரைக்குடி கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் சேலைகளை அரசே கொள்முதல் செய்ய முயற்சி எடுப்பேன் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., கற்பகம் இளங்கோ, ஊராட்சி ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி., செந்தில்நாதன், கே.ஆர்., மாசான், சுப்பிரமணியன், நரிவிழி கிருஷ்ணன், பேரூராட்சி செயலாளர்கள் நல்லமுத்து, ஆர்எம்., குணசேகரன், மாணிக்கம், காரைக்குடி நகர் செயலாளர் மெய்யப்பன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சின்னத்துரை, போஸ், சந்திரபோஸ், தேவன் பங்கேற்றனர்.