/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வக்கனக்கோட்டை ரோடு சீராகுமா? மறைந்த பாலத்தால் மக்கள் அவதி
/
வக்கனக்கோட்டை ரோடு சீராகுமா? மறைந்த பாலத்தால் மக்கள் அவதி
வக்கனக்கோட்டை ரோடு சீராகுமா? மறைந்த பாலத்தால் மக்கள் அவதி
வக்கனக்கோட்டை ரோடு சீராகுமா? மறைந்த பாலத்தால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 07, 2024 11:27 PM

தேவகோட்டை: வக்கனக்கோட்டை கிராம ரோட்டை சீரமைப்பார்களா என கிராமத்தினர் கேள்வி கேட்கின்றனர்.
தேவகோட்டையில் இருந்து சிறுவாச்சி வழியாக கண்ணங்குடி செல்லும் ரோட்டில் வக்கனக்கோட்டை கிராமம் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் வக்கனக்கோட்டை உள்ளது.
இங்கு 150 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். மெயின் ரோட்டில் இருந்து வக்கனக்கோட்டை செல்லும் ரோடு முற்றிலும் சேதமடைந்து மண் ரோடாக காட்சியளிக்கிறது.
மெயின் ரோட்டின் திருப்பத்தில் உள்ள கால்வாய் பாலம் ரோட்டை விட தாழ்வாக உள்ளது. மேலும் பிரதான ஆற்றின் மேல் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தரை பாலம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.
பாலத்தின் இரண்டு புறமும் மண் அரித்து கற்கள் பெயர்ந்து விழுகிறது.
திருப்பத்தில் இந்த பாலம் இருப்பதால் அந்த ரோட்டில் தெரு விளக்கே இல்லாததால் திரும்பும் போது விபத்து ஏற்படும் நிலை தொடர்கிறது.
ரோட்டின் அவல நிலை பற்றி அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் குமுறுகின்றனர்.