ADDED : மார் 08, 2025 04:18 AM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று கலெக்டர் அலுவலகம் முன் சமூக நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி வரவேற்றார்.
கலெக்டர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவன், கோட்டாட்சியர் விஜயகுமார், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.
விழாவில், போக்குவரத்து காவல் போலீசாருக்கான நடமாடும் நிழற்குடையை கலெக்டர், போக்குவரத்து காவல் எஸ்.ஐ., அழகுராணியிடம் வழங்கினார். சிறப்பு எஸ்.ஐ.,க்கள் செல்வராஜ், அமுதா பங்கேற்றனர். அனைத்து துறைகளை சார்ந்த பெண்கள், கலெக்டரை சந்தித்து மகளிர் தின வாழ்த்தை தெரிவித்தனர்.