/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ஆற்றில் குளியல் போடும் இளைஞர்கள்
/
மானாமதுரை ஆற்றில் குளியல் போடும் இளைஞர்கள்
ADDED : மே 19, 2024 06:14 AM

மானாமதுரை : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. மக்கள் வெயிலின் கொடுமையால் வெளியே செல்ல தயங்கினர்.கடந்த மூன்று நாட்களாக வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்காக வைகை அணையில் இருந்து கடந்த வாரம் மூவாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது மானாமதுரையை கடந்து கீழப்பசலை கண்மாய்க்கு தடுப்பணை வழியாக கால்வாயில் தண்ணீர் செல்கிறது.
இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கோடை வெயிலின் உக்கிரத்தை குறைக்கும் வகையில் கால்வாயில் குதித்தும்,டைவ் அடித்தும் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர். மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையை ஒட்டி தடுப்பணை அமைந்துள்ளதால் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்களும் ஆற்றில் இறங்கி குளித்து செல்கின்றனர்.

