/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ரயிலில் 100 கிலோ ரேஷன் அரிசி
/
மானாமதுரை ரயிலில் 100 கிலோ ரேஷன் அரிசி
ADDED : மார் 18, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மதுரையில் இருந்து ராமநாதபுரம் சென்ற பயணிகள் ரயில் நேற்று மதியம் 2:20 மணிக்கு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த போது ரயில்வே போலீஸ் எஸ்.ஐ.,க்கள் வசந்தி,தனுஷ்கோடி, ராஜா மற்றும் போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர்.
ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 6 சாக்கு பைகளில் இருந்த 100 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைத்தனர்.