/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் 116.20 மி.மீ., மழை
/
திருப்புவனத்தில் 116.20 மி.மீ., மழை
ADDED : நவ 07, 2025 04:06 AM
சிவகங்கை: மாவட்டத்தில் திருப்புவனத்தில் அதிகப்படியாக ஒரே நாளில் 116.20 மி.மீ., மழை பதிவானது.
வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில், அவ்வப்போது பெய்யும் மழையால் மானாவாரியாக விவசாயிகள் நெல் நடவு பணியை செய்து வருகின்றனர்.
கிணற்றில் தேங்கிய நீரை வைத்து, அடுத்து வரும் மழை நெற்பயிரை காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையில், கிணற்று பாசனம் மூலம் அலவாக்கோட்டை, கீழப்பூங்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் நாற்று நடும் பணியை மேற் கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் விளைந்து அதிகளவில் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அக்., 24 வரை ஒரு வார காலத்திற்கு அவ்வப்போது அனைத்து தாலுகாவிலும் ஓரளவிற்கு மழை பெய்தது. அதற்கு பின் கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து, கோடை போல் காணப்பட்டது.
விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட சற்று தயங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் பலத்த மழை பெய்ததால் சிவகங்கை குளிர்ச்சியானது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக திருப்புவனத்தில் ஒரே நாளில் 116.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
சிங்கம்புணரியில் 21, சிவகங்கையில் 9.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மற்ற தாலுகாக்களில் மழை பெய்யவில்லை என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. திருப்புவனம் பகுதியில் பெய்த மழைக்கு ஒரு ஓட்டு வீடு சேதமானது.
நேற்று முன்தினம் மாலை வயலில் வேலை செய்த போது மின்னல் தாக்கியதில், மாமியார், மருமகள் இருவரும் காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

