/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு தண்ணீர் வராததால் மக்கள் அலைச்சல்

ADDED : நவ 07, 2025 04:07 AM
சிவகங்கை: சருகணி அருகேயுள்ள கொங்கதிடல் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுவதாகவும் தங்கள் பகுதிக்கு மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சருகணி அருகே உருவாட்டி ஊராட்சியை சேர்ந்தது கொங்கதிடல் கிராமம். இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். கிராமத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் குடிநீர் வருவதில்லை. குடிப்பதற்கு ஊரணி தண்ணீரை தான் மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை.
கிராமத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. கிராமத்திற்கு பொதுக் கழிப்பறை கிடையாது. கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி செல்வதற்கு அங்கன்வாடி கிடையாது.
பள்ளி செல்லும் குழந்தைகள் தொடக்கப்பள்ளிக்கு அருகில் உள்ள உருவாட்டி கிராமத்திற்கு 6 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். பஸ் வசதி கிடையாது.
எனவே தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.