/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலை டி.ஐ.ஜி.,விசாரணை
/
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலை டி.ஐ.ஜி.,விசாரணை
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலை டி.ஐ.ஜி.,விசாரணை
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலை டி.ஐ.ஜி.,விசாரணை
ADDED : செப் 19, 2024 02:23 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலை நடந்ததையடுத்து டி.ஐ.ஜி., முகாமிட்டு விசாரித்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காளையார் 56. விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று பாப்பாக்குடி கண்மாயில் விறகு வெட்ட சென்றார். அங்கு சிலர் அவரை வெட்டிவிட்டு தப்பினர். காளையார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உறவினர்கள் பூவந்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவக் கல்லுாரிக்கு வந்த காளையார் உறவினர்கள் நேற்று மதியம் 2:30 மணிக்கு கொலையாளிகளை கண்டுபிடிக்க கோரி மானாமதுரை ரோட்டில் அம்பேத்கர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன், டி.எஸ்.பி., அமல அட்வீன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேச்சுநடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
இரட்டைக்கொலை
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி படமாத்துார் ரோட்டில் வசித்து வருபவர் வெள்ளைச்சாமி மனைவி சொர்ணமுத்து 80. இவரது மகள் பாண்டிலெட்சுமி 50. இவருக்கு சோனியா என்ற மகள் உள்ளார். சோனியாவுக்கு பசுபதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. பசுபதியை பிரிந்த சோனியா சென்னையில் உள்ளார். பசுபதி நேற்று தனது மனைவி வீட்டிற்கு சென்றார். மனைவியின் அம்மா பாண்டிலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். பாண்டிச்செல்வியின் தாயார் சொர்ணமுத்து தடுத்தார். ஆத்திரம் அடைந்த பசுபதி இருவரையும் வாளால் வெட்டிவிட்டு தப்பினார். இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். அக்கம்பக்கத்தினர் திருப்பாச்ேசத்தி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இருவரது உடலையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே நாளில் 3 கொலை நடந்ததால் டி.ஐ.ஜி., அபிநவ் குமார் சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் முகாமிட்டு எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷுடன் விசாரித்து வருகிறார்.