/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழைய பென்ஷன் திட்டம் ஒழிப்பால் 5,864 முன்னாள் ஊழியர் குடும்பம் தவிப்பு
/
பழைய பென்ஷன் திட்டம் ஒழிப்பால் 5,864 முன்னாள் ஊழியர் குடும்பம் தவிப்பு
பழைய பென்ஷன் திட்டம் ஒழிப்பால் 5,864 முன்னாள் ஊழியர் குடும்பம் தவிப்பு
பழைய பென்ஷன் திட்டம் ஒழிப்பால் 5,864 முன்னாள் ஊழியர் குடும்பம் தவிப்பு
ADDED : மார் 01, 2024 12:55 AM

சிவகங்கை:''பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த மறுப்பதால், 2021 வரை உயிரிழந்த 5,864 ஊழியர்களின் குடும்பம் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது,'' என, சிவகங்கையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.செல்வகுமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக அரசு ஊழியர்களில் 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்பவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, 6.28 லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர்களாக சேர்க்கப்பட்ட, 10,200 பேருக்கும் புதிய பென்ஷன் திட்டம் தான் பொருந்தும்.
அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் வெற்றியாக ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தின.
தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களும், அரசிடம் பல்வேறு போராட்டங்கள், பேச்சு மூலம் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி கோரிக்கை வைத்தும், கொண்டுவர மறுக்கிறது.
புதிய பென்ஷன் திட்டத்தால் 2003ல் இருந்து 2021 டிச., வரை உயிரிழந்த 5,864 அரசு ஊழியர்களின் குடும்பம், பணி ஓய்வு பெற்ற 30,800 ஊழியர்களுக்கு எவ்வித பண பலனும் கிடைக்காமல் அன்றாடம் வாழ்க்கை நடத்தக்கூட வழியில்லாமல் பொருளாதார சிக்கலில் தவிக்கின்றனர்.
தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

