/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
68 வயது மனைவி கொலை; 75 வயது கணவர் 'எஸ்கேப்'
/
68 வயது மனைவி கொலை; 75 வயது கணவர் 'எஸ்கேப்'
ADDED : ஆக 13, 2025 01:42 AM
மானாமதுரை; மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியில் குடும்பத்தகராறில் 68 வயது மனைவியை வெட்டிக்கொன்ற 75 வயது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில் இவர்கள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம், பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு 8:30 மணிக்கு மீண்டும் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து முருகன் மனைவி மூக்கம்மாளை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்த மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பலியானார். முருகனை போலீசார் தேடுகின்றனர்.